உலகம்

தங்க அட்டை: வசதிபடைத்தவர்களுக்கான நிரந்தர குடியுரிமை

05/04/2025 07:36 PM

வாஷிங்டன், 05 ஏப்ரல் (பெர்னாமா) -- அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த வசதி படைத்தவர்கள் அங்கு நிரந்தரமாக தங்குவதற்கு ஏதுவாக நிரந்திர குடியுரிமை வழங்கும் தங்க அட்டையை அதன் அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார்.

தமது முகம் பதித்துள்ள அந்த தங்க அட்டையை அவர் அமெரிக்க ஊடகங்களிடம் அறிமுகப்படுத்தினார்.

இத்திட்டம் தற்போதுள்ள EB5 முதலீட்டாளர் விசாவிற்கு பதிலாகவும், குடியுரிமைக்கான வழியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டணம் செலுத்தி விசா பெறத் தயாராக இருக்கும் நிறுவனங்கள் உட்பட தனிநபர்களை இந்த அட்டை இலக்காகக் கொண்டுள்ளது.

அதோடு, வசதிபடைத்த மற்றும் மிகவும் திறமையான நபர்களையும் இது இலக்காகக் கொண்டுள்ளது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]