விளையாட்டு

ஆட்டத்திறனை தொடர்ந்து தற்காத்துக்கொள்ளும் இலக்கில் நூர் ஹசிரா ரம்லி

03/04/2025 06:13 PM

கோலாலம்பூர், 03 ஏப்ரல் (பெர்னாமா) -- மலேசியாவின் பெயரை அனைத்துலக அரங்கில் பிரகாசிக்கச் செய்ய தமது ஆட்டத்திறனை தொடர்ந்து தற்காத்துக்கொள்ளும் இலக்கில் உள்ளார் தேசிய மகளிர் போலிங் வீராங்கனையான நூர் ஹசிரா ரம்லி. 

முடிந்தவரை பல போட்டிகளில் பங்கேற்க தாம் கவனம் செலுத்தி வருவதாகவும் அதன் வழி நாட்டிற்கான பதக்கத்தை வென்று தர வேண்டும் என்று தாம் எண்ணம் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

22 வயது ஆட்டக்காரரான அவர் போடியம் திட்டத்தில் பங்கேற்பதற்கு அண்மையில் தேர்வானார்.

அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, போலிங் விளையாட்டில் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களிடமிருந்து அதன் அறிவையும் நுட்பங்களையும் கற்றுக்கொள்ள போவதாகவும் நூர் ஹசிரா ரம்லி கூறியுள்ளார்.

2024 மலேசிய அனைத்துலக பொது போலிங் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அவர் இனி தாம் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றியை தமக்கு சாதமாக்குவதில் உறுதியாக இருக்கிறார்.

சரவாக்கைச் சேர்ந்த அவர், இவ்வாண்டு நவம்பர் மாதம் ஹாங்காங்கில் நடைபெறும் உலகக் கிண்ண போட்டியில் தனது இடத்தை உறுதி செய்யவும் அடுத்த மாதம் தாய்லாந்தில் நடைபெறும் சீ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]