பொது

விமான நிலையத்தில் போதைப் பொருள் கடத்தல் சம்பவம் முறியடிப்பு

04/04/2025 07:51 PM

புத்ராஜெயா, 04 ஏப்ரல் (பெர்னாமா) -- 16 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான இரு போதைப் பொருள் கடத்தல் முயற்சிகளை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் போலீஸ் முறியடித்தது.

இதில் சந்தேகிக்கப்பட்ட 38 வயதுடைய இந்தோனேசிய ஆடவரை கே.எல்.ஐ.ஏ மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றவியல் பிரிவு கைது செய்ததாக அம்மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சூப்ரின்டெண்டன் அல்பனி ஹம்சா தெரிவித்தார்.

சந்தேகத்தின் பேரில் ஒருவரின் பொருட்களை ஆய்வு செய்ததில் ஐந்து மடிக்கணினிகள் கிடைத்ததாக அவர் கூறினார்.

ஒவ்வொரு மடிக்கணினி கைகளிலும் இரு பிளாஸ்டிக் பொட்டலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன.

அதில் 5,726 கிராம் எடையிலான கொக்கேயின் என்று சந்தேகிக்கப்படும் வெள்ளைத் தூள்கள் இருந்தன.


-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)