ஜோகூர் பாரு, 04 ஏப்ரல் (பெர்னாமா) -- நேற்றிரவு, ஜோகூர் பாரு, பாசிர் கூடாங்கில் உள்ள தஞ்சோங் லங்சாட் துறைமுகம், தி.எல்.பி.தி-யில் 1.6 கன மீட்டர் வரையிலான எண்ணெய் கசிவு கண்டறியப்பட்டுள்ளது.
பாசிர் கூடாங், தஞ்சோங் லங்சாட் துறைமுகத்தில் உள்ள முனைய தொட்டியிலிருந்து MT EPITOME எனப்படும் கப்பலுக்கு மிகக் குறைந்த நிலையிலான Sulfur Fuel Oil, VLSFO எரிபொருள் எண்ணெயைக் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவின் காரணமாக, எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக சுற்றுச்சூழல் துறையில் தலைமை இயக்குநர் டத்தோ வான் அப்துல் லத்தீஃப் வான் ஜாக்பார் கூறினார்.
சம்பந்தப்பட்ட துறை சார்ந்த ஊழியர்கள் கொண்ட குழுவை விசாரணைக்கு அனுப்புவதற்கு முன்னதாக, தி.எல்.பி.தி-யில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு குறித்து சுற்றுச்சூழல் துறைக்குப் புகார் கிடைத்ததாக, அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம், எம்.பி.ஏ-விற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வான் அப்துல் லத்தீஃப் கூறினார்.
இதனிடையே, எண்ணெய் மாசுப்பாடு குறித்து புகாரளிக்க, பொதுமக்கள் திரையில் காணும் , 1-800-88-2727 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)