உலகம்

பொலிவியா வெள்ளத்தில் 53 பேர் பலி

03/04/2025 05:35 PM

லா பாஸ், 03 ஏப்ரல் (பெர்னாமா) -- பொலிவியாவில் ஐந்து மாதங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 53 பேர் உயிரிழந்தனர்.

மேலும், எண்மர் காணாமல் போயுள்ளதோடு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.

இந்த வெள்ளத்தினால், 3,000 கால்நடைகள் ஆபத்தில் இருப்பதாக பொது பாதுகாப்பு துணை அமைச்சர் யுவான் கார்லஸ் கெல்விமொண்டெஸ் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக, வெள்ளத்தில் மூழ்கிய விவசாய நிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பசுக்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெனியின் அமெசொன் பகுதி, ஒருரோ, விவசாய உற்பத்தியில் கவனம் செலுத்தும் குகுய்சக்கா மற்றும் லா பாஸ் ஆகியவையும் அடங்கும்.

மழையினால் பல முக்கிய சாலைகள் சேதமடைந்தன.

நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தினால் பல கிராமப்புற நகரங்களுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அரிசி மற்றும் பிற பயிர்கள் சேதமடைந்ததால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று அரசாங்கம் கணித்துள்ளது.

அந்நாட்டின் எரிபொருள் பற்றாக்குறையும் அதிகரித்தது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]