சுபாங் ஜெயா, 06 ஏப்ரல் (பெர்னாமா) -- புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியில் இறுதிக்கட்ட மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.
அந்த மதிப்பீட்டு முடிவுகளின் அறிக்கை, இன்று மாலை ஜேபிபிஎம்-மின் தனிப்பட்ட கலந்தாலோசிப்புக் கூட்டத்தில் பேசப்படும் என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முஹமட் தெரிவித்தார்.
தீச்சம்பவத்தின் மதிப்பீட்டு பணியில் ஜேபிபிஎம்மைத் தவிர்த்து வெளியில் உள்ள மற்ற நிறுவனங்களின் உட்படுத்தப்பட்டிருப்பதால், இதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக டத்தோ நோர் ஹிஷாம் கூறினார்
அதேவேளையில், வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பலாமா வேண்டாமா என்பதை மதிப்பிடுவதற்காக மின் கம்பிகள் குறித்தும் தீயணைப்புத் துறையினர் மதிப்பீட்டை மேற்கொண்டனர்.
அவ்விவகாரம் குறித்து அடுத்த செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று, இன்று பெர்னாமா தொடர்பு கொண்ட போது அவர் அவ்விவரங்களைக் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)