புத்ராஜெயா, 07 ஏப்ரல் (பெர்னாமா) -- லட்சம் கோடி டாலர்கள் வரை நஷ்டத்தைப் பதிவு செய்த அமெரிக்க சந்தை வீழ்ச்சியின் தாக்கம் உட்பட உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ள மலேசியா தனது தயார்நிலையை அதிகரிக்க வேண்டும்.
நாட்டின் பொருளாதார அடித்தளம், நம்பிக்கையூட்டும் எண்ணிக்கையுடன் வலுவாக இருந்தாலும் அமெரிக்காவின் வரி விதிப்புகள் மற்றும் வர்த்தக உறவுகள் உட்பட உடனடி கவனம் செலுத்த வேண்டிய சில எதிர்பாராத நிலவரங்களும் இருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
"அமெரிக்காவின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் உயர்வானது. மின்னியல் உபரிப்பாக நிறுவனம், இன்ஃபினியோன் காரணத்தால் அண்மையில் சீனாவுடனும் ஜெர்மனியுடனும் போட்டியிடுகின்றோம். இது சாத்தியக்கூறைப் பற்றியும் சிந்திக்க வைக்கின்றது. ஏனென்றால், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் எங்களுக்கு தேவையில்லை. வேலைதான் அவர்களது வாழ்க்கை", என்று அவர் கூறினார்.
அமெரிக்காவிற்கான மலேசியாவின் ஏற்றுமதி மதிப்பு, உயர்வானது என்று கூறிய பிரதமர், மின்னியல் உபரிப்பாக ஏற்றுமதி மட்டும் பத்தாயிரம் கோடி டாலரை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒரு கூட்டு நிலைப்பாட்டை உருவாக்கி ஒருங்கிணைக்கும் நோக்கில் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ரூல் அப்துல் அசிச் மற்றும் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த சகாக்களுடன் வரும் வியாழக்கிழமை சந்திப்பு ஒன்று நடைபெறவிருப்பதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)