கங்கார், 11 ஏப்ரல் (பெர்னாமா) - கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி தனது 11 வயது மகளுக்குக் காயம் ஏற்படும் அளவிற்கு துன்புறுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை தனித்து வாழும் தாயார் ஒருவர் இன்று கங்கார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்தார்.
மொழிப்பெயர்ப்பாளரால் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர் 33 வயதான ONG YIING JY அதனை மறுத்து விசாரணைக் கோரினார்.
கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி தாமான் கங்காரில் உள்ள அறை ஒன்றில் தமது சொந்த மகளுக்கு உடலில் காயங்கள் ஏற்படும் அளவிற்கு துன்புறுத்தியதாக அப்பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2006-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட 2001-ஆம் ஆண்டு சிறார் சட்டம் செக்ஷன் 31(1)(a)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
10,000 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிபர் உத்தரவாதத்தின் பேரில் Ong-ஐ விடுவித்த நீதிபதி Sharifah Norazlita Syed Salim Idid, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)