கோலாலம்பூர், 20 மே (பெர்னாமா) -- நீண்ட காலம் தமக்கு ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக பூப்பந்து விளையாட்டில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெறலாம் என்று தாம் முடிவு செய்துள்ளதாக தேசிய ஆடவர் ஒற்றறையர் ஆட்டக்காரர் ங் சீ யொங் தெரிவித்தார்.
இரண்டாவது அறுவை சிகிச்சை மேற்கொண்ட போதிலும், அவரது உடல்நிலை இன்னும் முழுமையாக குணமடையாமல் இருப்பதால், பூப்பந்து அரங்கில் அவரது எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.
காயத்திலிருந்து ஓராண்டுவரை காத்திருந்து குணமடைந்த ங் சீ யொங், கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற ஆசிய பூப்பந்து வெற்றியாளர், தொடங்கி பல போட்டிகளில் மீண்டும் களமிறங்கினார்.
தைவான், தாய்லாந்து போட்டிகளில் பங்கேற்றார், ஆனால் மூன்று போட்டிகளிலும் அவர் முதல் சுற்றில் வெளியேற்றப்பட்டார்.
ஆயினும், 25 வயதான அந்த வீரர் இன்னமும் நம்பிக்கையுடன் இருக்கிறார், தனது செயல்திறன் இப்போது முன்னேற்றத்தைக் காட்டத் தொடங்கியுள்ளதாவும் அவர் கூறுகிறார்.
-- பெர்னாமா