விளையாட்டு

தாய்லாந்து பொது பூப்பந்து: தேசிய இரட்டையர் இறுதி போட்டிக்கு முன்னேறினர்

17/05/2025 06:01 PM

பேங்காக், 17 மே (பெர்னாமா) --  தாய்லாந்து பொது பூப்பந்து போட்டியில், நாட்டின் தேசிய இரட்டையர்களான ஆரோன் சியா - சொ வுய் இக் ஜோடி இறுதி போட்டிக்கு முன்னேறினர்.

இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், அந்த ஜோடி உபசரணை நாட்டின் போட்டியாளர்களை நேரடி செட்களில் வீழ்த்தியது.

உலகத் தர வரிசியில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் மலேசிய ஆரோன் சியா - சொ வுய் இக் ஜோடியினர் 21-17, 21 13 என்று இந்த ஆட்டத்தில் வெற்றிப் பெற்றனர்.

இந்த ஆட்டம் 38 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.

நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மலேசியா டென்மார்க் உடன் மோதுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)