பேங்காக், 17 மே (பெர்னாமா) -- அண்மையில், தாய்லாந்து தலைநகர் பேங்காக்கை உலுக்கிய நிலநடுக்கத்தின் போது, சுமார் 100 தொழிலாளர்களை பலிகொண்ட, இடிந்து விழுந்த கட்டடத்தின், கட்டுமான நிறுவன அதிகாரிகள் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர்.
அரசு தணிக்கை அலுவலகக் கட்டடம் சரிந்ததன் தொடர்பில் Italian-Thai Development நிறுவனத் தலைவர் பிரேம்சாய் கர்னசுதா மற்றும் 14 பேர் போலீசில் சரணடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம், அண்டை நாடான மியன்மாரில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவான வேளையில், அதன் அதிர்வுகள் தாய்லந்திலும் உணரப்பட்டது.
அப்போது, பேங்காக்கில் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்த கட்டடம் சரிந்ததில் சுமார் 100 பேர் வரை அதில் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில், கட்டுமான குத்தகை நிறுவனத்தார், கட்டட வடிவமைப்பாளர், பொறியிலாளர்கள் என்று 17 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
கட்டுமான விதிமுறைகளை மீறியதுடன், அவர்கள் அலட்சியமான நடவடிக்கை இதற்கு காரணம் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்களில் 14 பேர் சரணடைந்திருக்கும் நிலையில், எஞ்சியவர்கள் விரைவில் சரணடைவர் என்று பேங்காக் போலீசார் கூறியுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)