ஜார்ஜ்டவுன், 17 மே (பெர்னாமா) -- கெஅடிலான் கட்சியில் 2025 முதல் 2028-ஆம் ஆண்டுக்கான தேர்தலில் ஆதரவைப் பெறுவதற்கு பண அரசியல் நிலவுவதாக கூறப்படுவதை நம்பிக்கை கூட்டணியின் தலமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மறுத்துள்ளார்
பண அரசியல் தொடர்பாகக் கூறப்படும் எந்தப் புகாரும் கட்சியின் ஒழுங்குமுறை வாரியத்திற்கு இதுவரை கிடைக்கவில்லை என்று கெஅடிலானின் முன்னாள் பொது செயலாளருமான அவர் தெரிவித்தார்.
''ஆதரவைப் பெற பணம் கொடுப்பதானால் பண அரசியல், கெஅடிலானில் அந்த அளவில் இருப்பதாக நான் நினைக்கவில்லை.ஆனால் நீங்கள் பணத்தைப் பயன்படுத்தி நிகழ்ச்சிகள், விருந்துகள், கூடாரங்களை வாடகைக்கு எடுத்தால், தங்குமிடத்திற்கு பணம் செலுத்துவதென்றால்?.. அது இருக்கிறது என்று நினைக்கிறேன்,'' என்றார் சைஃபுடின்.
பினாங்கு, கோத்தா லாமாவில் நடைபெற்ற 235-வது சிறைச்சாலை தின விழாவில் கலந்து கொண்ட பிறகு அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)