கனடா, 29 ஏப்ரல் (பெர்னாமா) - கனடாவின் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரின் தலைமையிலான LIBREAL கட்சி வெற்றி பெற்றது.
இருப்பினும், இந்த வெற்றியானது பெரும்பான்மை அரசாங்கத்தை அல்லது சிறுபான்மை அரசாங்கத்தை உருவாக்குமா என்பதை தீர்மானிப்பதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது.
பெரும்பான்மை அரசாங்கத்தை உருவாக்குவதற்கு, ஒரு கட்சி 172 தொகுதிகளை வென்றிருக்க வேண்டும்.
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பின் மோசமான வர்த்தக நிலைப்பாட்டைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான Carney, கடந்த வாரங்களில் புதிய உத்வேகத்தைப் பெற்றிருந்தார்.
அதேவேளையில் Pierre Poilievre தலைமையிலான பழைமைவாத கட்சி, வரி குறைப்பினையும் அரசாங்க செலவினங்களைக் குறைப்பதையும் வலியுறுத்தி பிரச்சாரம் செய்தது.
இதனிடையே, ஒட்டாவாவில் உள்ள 343 மக்களவை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்கு சுமார் இரண்டு கோடியே 90 லட்சம் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)