புதுடெல்லி, 29 ஏப்ரல் (பெர்னாமா) -- காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட 26 பேரின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
பெஹல்காம் மலைப்பகுதியில் ஒருவாரத்துக்கு முன் நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு சதித்திட்டம் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீரில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக, பாகிஸ்தானும் இந்திய இராணுவமும் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
அதற்கு எதிராக இந்தியா கடுமையான பதிலடி கொடுக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து அதற்காக பாகிஸ்தான் நிதியளிப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றஞ்சாட்டுகிறது.
ஆனால் பாகிஸ்தான் அதைத் தொடர்து மறுத்து வருகிறது.
அண்மைத் தாக்குதல் அவ்வட்டாரத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)