உலகம்

ஆப்கானிஸ்தானின் 54 தீவிரவாதிகளைப் பாகிஸ்தான் சுட்டுக் கொன்றது

28/04/2025 06:07 PM

இஸ்லாமாபாத், 28 ஏப்ரல் (பெர்னாமா) -- நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற ஆப்கானிஸ்தானின் 54 தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாகப் பாகிஸ்தான் இராணுவம் அறிவித்திருக்கிறது.

இந்த தாக்குதல், தனது எல்லையில் பாகிஸ்தான் எதிர்கொள்ளும் பெரும் சவால்களை அம்பலப்படுத்தியது.

பெரிய அளவிலான தீவிரவாதிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டதால், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பாகிஸ்தானிய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறினார்.

மேலும், இத்தாக்குதலில் அதிகமான ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

கடந்த செவ்வாய்க்கிழமை, இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் உள்ள நெருக்கடி பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தான் ஊடுருவ முயன்றிருப்பது பாகிஸ்தானுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)