காஷ்மீர், 29 ஏப்ரல் (பெர்னாமா) -- இரு நாடுகளுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வந்த நிலையிலும், வட இந்தியாவில் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்கமிற்கு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் திரும்ப வரத் தொடங்கியுள்ளனர்.
தினமும் 5,000 முதல் 7,000 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட பரபரப்பான மையமாக இருந்த அப்பகுதி, அண்மையில் நிகழ்ந்த கொடூர தாக்குதலுக்குப் பின்னர் மிகப் பெரிய சரிவைக் கண்டிருந்தது.
பதற்ற சூழ்நிலையிலும், கொர்சியா மற்றும் செர்பியா நாடுகளைச் சேர்ந்த சில சுற்றுப் பயணிகள் பஹல்கமில் நடமாடுவதைக் காண முடிகிறது.
''அதைப் பற்றி எனக்கு எந்த பயமும் இல்லை. இது வழக்கமாக நிகழும் சம்பவம் என்று நான் நினைக்கிறேன். இது எல்லா இடங்களிலும் நிகழும் ஒன்றுதான். எனவே, நீங்கள் எதற்காவது பயப்படுகிறீர்கள் என்றால், வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கலாம். நீங்கள் வீட்டில் இருந்தாலும் இது நிகழலாம். இது ஐராப்பாவிலும் நிகழ்ந்துள்ளது. மற்ற இடங்களிலும் நிகழ்ந்துள்ளது. இந்த உலகத்தில் எதுவுமே பாதுகாப்பான இடமில்லை,'' என்கிறார் அட்மிர் ஜாஹிக்.
''நாங்கள் பஹல்காமில் இருக்கிறோம். எங்கள் சக சுற்றுலாப் பயணிகளின் மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். இருப்பினும், பஹல்காமில் சந்தைகள் மற்றும் மற்ற அனைத்தும் இன்னும் திறந்தே உள்ளன. பயப்பட ஒன்றுமில்லை. இந்திய ராணுவம் இங்கே உள்ளது. அரசாங்கம் எங்களுடன் உள்ளது. உள்ளூர் மக்களும் கூட எங்களுக்கு ஆதரவளிக்கின்றனர். நான் வந்ததிலிருந்து, எனக்கு எந்த பயமும் ஏற்படவில்லை,'' என்றார் மொஹமட் ஹனாஸ்.
இதனிடையே, காஷ்மீர் பள்ளத்தாக்கின் முதுகெலும்பாக சுற்றுலாத்துறை உள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)