விளையாட்டு

பார்சிலோனா மீண்டும் உச்சத்தில்

16/05/2025 07:39 PM

பார்சிலோனா, 16 மே (பெர்னாமா) -- 2024-2025 ஸ்பெயின் லா லீகா கிண்ண காற்பந்து பட்டத்தை வரலாற்றில் 28-வது முறையாக கைப்பற்றுகிறது பார்சிலோனா.

கடந்த டிசம்பர் தொடங்கி, சொந்த இடத்தில் பார்சிலோனா தோற்கடிக்கப்படாத சாதனையை தற்காத்து தங்கள் திறமையை நிரூபித்துள்ளதாக ஜெர்மனியைச் சேர்ந்த அதன் பயிற்றுனர் ஹன்சி ஃபிலிக் கூறினார்.

இந்த பருவத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பார்சிலோனா சொந்த இடத்தில் நடைபெற்ற ஆட்டங்களில் தோல்வி காணாமல் வெற்றி பெற்றுள்ளது.

இன்னும் இரண்டு ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் அது 85 புள்ளிகள் பெற்று பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.

நடப்பு வெற்றியாளரும் பார்சாவின் பரம வைரீயுமான ரியல் மாட்ரிட் ஏழு புள்ளிகள் பின்னடவை சந்தித்து கிண்ணத்தை தற்காப்பதில் கோட்டை விட்டது.

இன்று காலை நடைபெற்ற ஆட்டத்தில் எஸ்பான்யோல் அணியை 2-0 என்ற கோல்களில் வீழ்த்தி பார்சிலோனா தனது கிண்ணத்தை உறுதி செய்தது.

அதனை அதன் ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இது அவர்களின் ஹெட்ரிக் சாதனையாகும்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)