வாஷிங்டன், 13 மே (பெர்னாமா) -- அமெரிக்காவின் எம்.எல்.எஸ் லீக் கிண்ண காற்பந்து போட்டியில் இண்டர் மயாமி மீண்டும் அதிர்ச்சி தோல்வி கண்டுள்ளது.
முன்னணி அணியான அது மின்னெசொட்டா யுனைடெட் அணியிடம் 1-4 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது
இதனால் தாக்குதல் ஆட்டக்காரர் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இண்டர் மயாமி அணியின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இண்டர் மயாமி அணியின் அனைத்து போட்டி ஆட்டங்களிலும் நான்காவது தோல்வியைத் தழுவியுள்ளது.
அதன் மோசமான ஆட்டத்தினால் பெரும் தோல்வி அடைந்ததாக அவ்வணியின் நிர்வாகி ஒப்புக்கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)