பார்சிலோனா, 16 மே (பெர்னாமா) -- கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அரங்கத்தின் வளாகத்தில் விபத்துக்குள்ளானதில் 13 காற்பந்தாட்ட ரசிகர்கள் காயத்திற்கு ஆளாகினர்.
வியாழக்கிழமை, ஸ்பெயினிற்கும் பார்சிலோனாவுக்கும் இடையிலான ஸ்பெயின் லா லிகா போட்டிக்கு முன்னதாக மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் குழு ஒன்று கூடியிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.
வாகனத்தின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து அரங்கத்தின் வளாகத்தில் இருந்த ரசிகர்கள் மீது மோதியது போலீசாரின் தொடக்கக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
இருப்பினும், கதாலோனியா வட்டாரத் தலைவர் சல்வாடோர் இலா, இச்சம்பவத்தை ஒரு தனிப்பட்ட வழக்கு என்றும், வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலோ அல்லது பயங்கரவாதத்தால் தூண்டப்பட்ட தாக்குதலோ அல்ல என்றும் விவரித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சொற்ப காயங்கள் ஏற்பட்டதோடு, உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.
ஆபத்தான வகையில் வாகனத்தைச் செலுத்தியததற்காகவும் காயத்தை விளைவித்ததற்காகவும் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)