உலகம்

டிக் டாக் நேரலையின் போது மாடல் அழகி சுட்டுக்கொலை

16/05/2025 07:21 PM

மெக்சிகோ சிட்டி, 16 மே (பெர்னாமா) --   சமூக ஊடக பிரபலமும் மாடல் அழகியுமான பெண் ஒருவர் டிக் டாக் நேரலையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். 

இச்சம்பவம் மெக்சிகோவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

BLOSSOM THE BEAUTY LOUNGE எனும் அழகு ஒப்பனை கடையில் இக்கொலை சம்பவம் நிகழ்ந்தது. 

இக்கொலை சம்பவத்தின் போது டிக் டாக் நேரலை செய்துக் கொண்டிருந்த 23 வயதுடைய வலேரியா மார்குவேஸ் 105,000 பின்தொடர்பாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அந்நேரம் ஆயுதம் ஏந்தி கடைக்குள் நுழைந்த ஆடவர் ஒருவர் அப்பெண்ணை சுட்டுக் கொலை செய்து விட்டு அங்கிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளார். 

இதனிடையே, இக்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)