இஸ்லாமாபாத், 17 மே (பெர்னாமா) -- இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலான போர் நிறுத்தம் மே 18-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது
இரு அணு ஆயுத நாடுகளும் முழு அளவிலான போர் விளிம்பில் இருந்தபோதிலும், நிலைமை தற்போது அமைதியாகவே இருப்பதாக இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை ஒரு போதும் மீறாது என்றும், அது தொடர்பான பேச்சுவார்த்தையை நோக்கியே தாங்கள் செயல்படுவதாக அந்நாட்டின் துணைப் பிரதமர் Ishaq Dar தெரிவித்துள்ளார்.
அத்தகைய நிலைபாட்டைத் தொடர்வதற்கு தாங்களும் ஒத்துழைப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய காஷ்மீர் தொடர்பாக அடிக்கடி மோதும் இந்தியா - பாகிஸ்தானும், கடந்த மே 7 தொடங்கி பல நாட்களாக தாக்குதலில் ஈடுப்பட்டு வந்தன.
மேலும், அந்த மோதலை அதிகரிப்பதாக இரு தரப்பிலும் குற்றம் சாட்டி வருகின்றன.
அதனைத் தொடர்ந்து, கடந்த மே 10 தொடங்கி, இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள் போர் நிறுத்த மீறல்கள் நடைபெற்றதாக செய்திகள் வந்தன.
ஆனால் ஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் உள்ளது.
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி 26 பேர் கொல்லப்பட்டதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான போர் மூண்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)