விளையாட்டு

ஆரோன் சியா - சோ வூய் யிக் ஜோடி சிறந்த விளையாட்டு வீரர்கள்

13/05/2025 08:09 PM

சுபாங் ஜெயா, 13 மே (பெர்னாமா) -- 2024-ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்கள் விருதை, நாட்டின் ஆடவர் பூப்பந்து இரட்டையர்களான ஆரோன் சியா - சோ வூய் இக் ஜோடியினர் பெற்றுள்ளனர்.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வெற்றிகரமாக தற்காத்தன் வழி, அவர்களுக்கு இவ்விருது சொந்தமாகியுள்ளது.

2022-ஆம் ஆண்டில், தேசிய விளையாட்டு விருது ASN-னை பெற்றதை அடுத்து, இந்த அங்கீகாரத்தை இரண்டாவது முறையாக ஆரோன் சியா - சோ வூய் இக் ஜோடி மீண்டும் பெற்றுள்ளனர்.

இது, தேசிய இரட்டையருக்கு மட்டுமின்றி, மலேசியப் பூப்பந்து சங்கம் பி.எம்,மிற்கும் மிக உயர்ந்த அங்கீகாரம் என்று விருதை பிரதிநிதித்து பெற்றுக்கொண்ட அதன் பொதுச் செயலாளர் டத்தோ கென்னி கோ கூறினார்.

இதனிடையே, தேசிய மகளிர் திடல் போலிங் விளையாட்டாளர் நோர் ஃபாரா எயின் அப்துல்லா, 2024-ஆம் ஆண்டின் சிறந்த தேசிய விளையாட்டு வீராங்கனை பட்டத்தை வென்று சாதனைப் படைத்தார்.

நாட்டின் மிக உயர்ந்த விளையாட்டு விருதான அதனை மாட்சிமை தாங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இன்று காலை சுபாங் ஜெயாவில் நடைபெற்ற விருது விழாவில் கலந்து கொண்டு வழங்கினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)