விஸ்மா பெர்னாமா, 20 மே (பெர்னாமா) - 58 ஆண்டுகால மலேசிய தேசிய செய்தி நிறுவனமான, பெர்னாமா தொடர்ந்து சிறந்த சேவையை வழங்குவதில் அதன் ஊழியர்கள் வேகமாக திறமையாக மற்றும் புத்தாக்க சிந்தனையோடும் இருக்க வேண்டும்.
ஊடகத்துறை தற்போது பரிணாம வளர்ச்சியில் செல்வதால், பெர்னாமா பல்வேறு ஊடக நிறுவனங்களுடன் தொடர்ந்து போட்டியிடுவதற்கான ஆற்றலையும், புதிய மாற்றங்களையும் நோக்கி பயணிக்க வேண்டும் என்று அதன் தலைமை நிர்வாக் அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் வலியுறுத்தினார்.
கோலாலம்பூர், விஸ்மா பெர்னாமாவில் இன்று நடைபெற்ற அதன் 58வது ஆண்டு நிறைவு விழாவில் அவர் உரையாற்றினார்.
இதில், பெர்னாமா தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜ், பெர்னாமா செய்தி சேவையின் துணை தலைமை ஆசிரியர் நஸ்ரியா டாருஸ் மற்றும் வர்த்தக செய்தியின் துணை தலைமை ஆசிரியர் அஸ்லினா அசிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)