பொது

பெர்னாமாவின் 58-ஆவது ஆண்டு நிறைவு விழா

20/05/2025 05:56 PM

கோலாலம்பூர், 20 மே (பெர்னாமா) - விரைவான மற்றும் நன்பகத்தன்மையான செய்திகளை வெளியிடுவதில் மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா தொடர்ந்து சிறந்து விளங்குகிறது.

பெர்னாமாவின் 58ஆவது நிறைவு விழாவை முன்னிட்டு அந்நிறுவனம் மீதான எதிர்பார்ப்பை தொடர்பு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ முஹமட் ஃபவுசி முஹமட் இசா தமது X  சமூக ஊடக தளத்தில் இவ்வாறு வெளிப்படுத்தினார்.

பெர்னாமாவின் 58-ஆவது ஆண்டு நிறைவு விழாவுக்கான தமது வாழ்த்துகளைத் தெரிவித்த டத்தோ முஹமட் ஃபவுசி, நம்பகத்தன்மையான செய்திகளை வழங்குவதில் பெர்னாமா சிறந்து விளங்கும் என்று தாம் நம்புவதாக கூறினார். 

1967-ஆம் ஆண்டு பெர்னாமா சட்டத்தின் கீழ் கடந்த 1968-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட இச்செய்தி நிறுவனம், செய்திகளை வழங்கும் சேவையைச் செயல்படுத்த தொடங்கியதுடன் அதன் புகைப்பட சேவையையும் விரிவுப்படுத்தியது.

2007-ஆம் ஆண்டில் பெர்னாமா வானொலி நிலையத்தை அறிமுகம் செய்ததுடன், 
2008-ஆம் ஆண்டில் தொலைக்காட்சியை உருவாக்கி தற்போது இலக்கவியல் ஊடகமாக செயல்பட்டு வருகின்றது. 

நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவும், செய்திகள் மற்றும் தகவல்களை துல்லியமாகவும், நியாயமாகவும் வழங்கும் நோக்கத்தில், பெர்னாமா கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது செய்தியை வழங்கி வருகின்றது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)