உலகம்

மியன்மாரில் தொடரும் தேடல் & மீட்புப் பணிகள்

31/03/2025 05:09 PM

மண்டலே, 31 மார்ச் (பெர்னாமா) -- சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மியன்மாரில் தேடல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த இயற்கை பேரிடரினால் இதுவரை 1,644 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்திருக்கிறது.

கட்டிட இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் தேடல் நடவடிக்கை தொடரப்பட்டு வருகிறது.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3,408-ஆக உயர்ந்துள்ள நிலையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 139-ஆக பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிரவாரண பணிகளில், சீனா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா உட்பட சில நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

நிலநடுக்கத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட மண்டலேயில் மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிலநடுக்கத்திற்குப் பிறகும் பல கிராமங்களில் இராணுவம் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை, ரிக்டர் அளவை கருவியில் 7.7-கப் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மியன்மாரை உலுக்கியது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]