விளையாட்டு

நிதி & நிர்வாகத்தில் திறமையானவர்கள் மட்டுமே காற்பந்து கிளப்புகளை நிர்வகிக்க முடியும்

06/05/2025 07:42 PM

கோலாலம்பூர், 06 மே (பெர்னாமா) -- நிதி மற்றும் நிர்வாகத்தில் திறமையானவர்களுக்கு மட்டுமே, நாட்டின் காற்பந்து கிளப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்க வேண்டும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ வலியுறுத்தியுள்ளார்.

இது உள்நாட்டு காற்பந்து விளையாட்டாளர்களின் நலனை உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.

ஊதிய பிரச்சனை மற்றும் விளையாட்டாளர்களின் நலன் போன்ற அடிப்படை விவகாரங்களை நிர்வகிக்க சில கிளப்புகள் தவறியிருப்பதை ஹன்னா யோ ஒப்புக் கொண்டார்.

இதனால், உள்நாட்டு விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களைக் கவரும் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று அவர் விளக்கினார்.

காற்பந்து மலிவான விளையாட்டு அல்ல என்றும் அதை சீராக நிர்வகிக்க முறையான  சுற்றுச்சூழல் அமைப்பு தேவைப்படுவதாகவும்  ஹன்னா யோ விளக்கினார்.

அண்மைய ஆண்டுகளாக உள்ளூர் காற்பந்து  கிளப்புகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மோசமடைந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)