விளையாட்டு

மலேசியாவிற்கு சுடிர்மான் கிண்ணம் கைநழுவியது

02/05/2025 05:28 PM

ஸ்யாமென், 02 மே (பெர்னாமா) -- 2025 சுடிர்மான் கிண்ணத்தை கைப்பற்றும் இலக்கில் மலேசியா தோல்வி கண்டுள்ளது. 

இன்று காலை நடைபெற்ற காலிறுதி​​ ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான சீனாவை வீழ்த்தும் அதன் கனவு ஈடேறாமல் மலேசியா 0-3 எனும் நிலையில் தோல்வியைத் தழுவியது. 

ஆட்டத்தைத் தொடங்கிய தேசிய கலப்பு இரட்டையர் செங் தாங் ஜி - தொ இ வெய்   ஜோடி முதல் புள்ளியைப் பெறுவார்கள் என்ற அதிக நம்பிக்கையுடன் இருந்தனர். 

ஆனால், உபசரணை நாட்டின் ஜோடி, 49 நிமிடங்களில் 17-21, 17-21 என்ற புள்ளிகளில் நேரடி செட்களில் மலேசிய இணையை வீழ்த்தியது. 

தொடர்ந்து,  ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்திலும், நாட்டின் லியோங் ஜுன் ஹவை 
21-6, 21-14 எனு 38 நிமிடங்களில் தோற்கடித்து சீனா அதன் நிலையை வலுப்படுத்தியது. 

மூன்றாம் ஆட்டத்திலும், சீனாவின் கைகள் ஓங்கிய வேளையில், நாட்டின் ஒற்றையர் பிரிவு வீராங்னை கெ. லெட்சனா 21-8, 21-7 என்று 32 நிமிடங்களில் செ யூ வெயிடம்  தோல்வியைத் தழுவினார். 

இந்த வெற்றியின் வழி, சீனா கிண்ணத்தைக் கைப்பற்ற ஒரு படி நெருங்கியுள்ள வேளையில், அடுத்த கட்டத்தில் பாரம்பரிய எதிரிகளான ஜப்பானை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)