பதாஸ், 06 மே (பெர்னாமா) -- வடக்கு பெரு, ஆண்டியன் எனும் பகுதியில் பல நாள்கள் பிணைக் கைதிகளாகப் சிறை பிடிக்கப்பட்ட 13 தொழிலாளர்கள், சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்களால் கொல்லப்பட்டனர்.
அந்த 13 பேரும் சிறிய சுரங்கத்தில் பணி புரிந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பதாஸ் எனும் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய சுரங்கத் தொழிலாளர்கள் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதைப் போலீஸ் உறுதிப் படுத்தியது.
2020-ஆம் ஆண்டு முதல் அப்பகுதியைச் சட்டவிரோத சுரங்கங்கள் ஆக்கிரமித்துள்ளதாக போலீஸ் கூறியது.
சுரங்கத் தொழிலாளர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக போலீசும் இராணுவமும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும், அண்மைய காலமாக அவர்களை கடத்தி கொலை செய்யும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.
இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சு தெரிவித்திருக்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)