பொது

மனைவியைக் காயப்படுத்திய நபர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்

22/05/2025 03:38 PM

கோத்தா பாரு, 22 மே (பெர்னாமா) -- கடந்த வாரம், மனைவியைக் கடுமையாக காயப்படுத்தியதாக கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை தொழிலாளி ஒருவர் ஒப்புக்கொண்டார்.

மே 15-ஆம் தேதி இரவு மணி 10 அளவில், பாச்சோக்கில் உள்ள ஒரு வீட்டில், 40 வயதான அஸ்வானாஸ்ரி மட் ரிஃபின் எனும் அந்த ஆடவர், தமது 33 வயது மனைவியின் நெற்றி மற்றும் மூக்கில் வேண்டுமென்றே காயங்களை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிக பட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 325-இன் கீழ் குற்றம் பதிவாகியது.

குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், நீதிமன்றம் அந்நபருக்கு எவ்வித ஜாமினும் வழங்கவில்லை.

ஜூன் 23-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டிருக்கும், இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு வரையில், அஸ்வானாஸ்ரியை தடுப்புக் காவலில் வைக்க நீதிபதி சுல்கிஃலி உத்தரவிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)