பலுசிஸ்தான், 22 மே (பெர்னாமா) -- பாகிஸ்தான், பலுசிஸ்தான் மாகாணத்தில் இராணுவப் பள்ளி பேருந்து மீது நடத்தப்பட்ட தற்கொலை படைத் தாக்குதலில், மூன்று குழந்தைகள் உட்பட ஐவர் பலியாகினர்.
நேற்று, குஷ்தார் மாவட்டத்தில், 40-க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிச் சென்ற இராணுவப் பள்ளி பேருந்தை, வெடிபொருள் நிரப்பிய கார் மோதி, அத்தாக்குதலை நடத்தியது.
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இதனிடையே, பாகிஸ்தான் இராணுவமும் பிரதமர் Shehbaz Sharif-உம்,
இவ்வன்முறையைக் கண்டித்து, இந்திய பயங்கரவாதிகள் இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என்று குற்றஞ்சாட்டி அறிக்கைகளை வெளியிட்டனர்.
இருப்பினும், தாக்குதலுக்கும் இந்தியாவிற்கும் தொடர்புள்ள ஆதாரங்களை அவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை.
பாகிஸ்தானின் அக்குற்றச்சாட்டுகளை இந்திய வெளியுறவு அமைச்சு மறுத்துள்ளது.
குவெட்டாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும், இராணுவப் பள்ளிப் பேருந்து தற்கொலை படைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை, பாகிஸ்தான் பிரதமர், ஷெபாப் சரிஃப், சந்தித்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
Sharif-உடன் இணைந்து இராணுவத் தளபதி அசிம் முனிரும் தற்காப்பு அமைச்சர் கவாஜா முஹ்மட் அசிஃப் அவர்களைச் சந்தித்துள்ளனர்.
மேலும், 38 பேர் காயமடைந்ததாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)