உலகம்

வாஷிங்டன் டி.சி.: இஸ்ரேலிய தூதரகப் பணியாளர்கள் சுட்டுக் கொலை

22/05/2025 04:47 PM

வாஷிங்டன் டி.சி , 22 மே (பெர்னாமா) -- அமெரிக்கா, வாஷிங்டன் டி.சி-இல் உள்ள கெப்பிட்டல் ஜெவிஷ் அருங்காட்சியகத்திற்கு வெளியே இஸ்ரேலிய தூதரகத்தின் இரு பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வடமேற்கில் FBI கள அலுவலகம் மற்றும் அமெரிக்க சட்டத்துறை அலுவலகங்களுக்கு அருகே உள்ள அந்த அருங்காட்சியத்தின் மூன்றாவது மற்றும் F வீதிகளில் ஒரு ஆணும் பெண்ணும் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பு கூறியது.

இச்சம்பவத்திற்கு முன்னர், அந்த அருங்காட்சியகத்திற்கு வெளியே காணப்பட்ட சந்தேக நபர் ஒருவரை போலீஸ் கைது செய்துள்ளதாக, வாஷிங்டன் போலீஸ் தலைவர் பமேலா ஸ்மித் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள அச்சந்தேக நபர் சுதந்திர பாலஸ்தீனம் என்று முழக்கமிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தாக்குதலுக்கான நோக்கம் குறித்த கேள்விகளுக்கு இஸ்ரேலிய தூதரகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)