சிட்னி , 22 மே (பெர்னாமா) -- ஆஸ்திரேலியா, நியூ செளத் வேல்ஸில் வெள்ளத்தால் சேதமடைந்த கட்டிடம் ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சிட்னியில் இருந்து வடகிழக்கே 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோட்டோ எனும் சிறிய நகரில் அச்சடலம் மீட்கப்பட்டதாக நியூ செளத் வேல்ஸ் போலீஸ் தெரிவித்தது.
63 வயதான வயோதிகர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அது தொடர்பிலான விசாரணையை போலீஸ் தொடங்கியது.
அந்நாட்டு நேரப்படி, காலை மணி எட்டுக்கு மக்களுக்கான இடமாற்ற உத்தரவு உட்பட நியூ செளத் வேல்ஸ் அவசர சேவை வெள்ள மண்டலத்தில் உள்ள 133 பகுதிகளுக்கு அவசர எச்சரிக்கைகளும் வெளியிடப்பட்டன.
அதோடு, மத்திய வடக்கு கடற்கரை மற்றும் அருகிலுள்ள சில பகுதிகளில் 24 மணி நேரத்தில் 200 முதல் 300 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்று ஆஸ்திரேலிய ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)