ரோம், 19 மே (பெர்னாமா) -- உலகின் முன்னிலை வீரரான யென்னிக் சின்னரை நேரடி செட்களில் தோற்கடித்து இத்தாலி பொது டென்னிஸ் பட்டத்தைக் கைப்பற்றினார் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ்.
ரோலண்ட் கார்ரோஸ் அரங்கில் சின்னர் தமக்கு கடும் போட்டியை வழங்குவார் என்று கணித்த அல்கராஸ் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தொடர்ச்சியாக அவரை நான்காவது முறை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
இத்தாலி ஃபோரோ அரங்கில் நடைபெற்ற இவ்வாட்டத்தின் முதல் செட்டில் யென்னிக் சின்னர் - கார்லோஸ் அல்கராஸ் இருவருமே கடுமையாகப் போராடினர்.
ஆயினும் 7-6 என்று ஒரு புள்ளி வித்தியாசத்தில் அல்கராஸ் வென்றார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் செட்டை அவர் 6-1 என்று மிக எளிதில் சின்னரை தோற்கடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் சின்னரின் 26 போட்டிகள் கொண்ட தொடர் வெற்றிக்கு அல்கராஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும், ரோமில் தமது முதல் பட்டத்தையும், ஏழாவது முறையாக மாஸ்டர்ஸ் பட்டத்தையும் வென்றுள்ளார்.
அல்கராஸ் தற்போது உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)