பொது

பினாங்கில் முதல் முறையாக நடைபெற்றது எடிசன் திரை விருது விழா

19/05/2025 05:55 PM

ஜார்ஜ்டவுன், 19 மே (பெர்னாமா) --    புகழ்பெற்ற எடிசன் திரை விருது விழா முதல் முறையாக பினாங்கு, ஜார்ஜ்டவுனில்  விமர்சையாக நடைபெற்றது. 

இவ்விழாவிற்கு, தமிழகத்திலிருந்து திரைப்பட கலைஞர்கள், தொழில்துறை முன்னணியாளர்கள் மற்றும் கொலிவுட் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். 

17-ஆவது ஆண்டாக நடத்தப்படும் எடிசன் திரை விருது விழாவை பினாங்கில் ஏற்று நடத்துவது பெருமைக்குரியது என்று மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.  

இவ்வாண்டு விழாவின் சிறப்பு அம்சமாக ‘எடிசன் திரைப்பட விழா’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பல்வேறு வகையான திரைப்படங்களை திரையிடுவதன் மூலம் படைப்பாற்றல் கொண்ட கதை சொல்லும் தொழில்நுட்ப மேன்மையும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

விருது பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த முதலமைச்சர், தங்களின் படைப்புகள் மக்களை ஊக்குவிக்கும் என்று உறுதியளித்தார்.  

இதனிடையே, சுற்றுலா மற்றும் படைப்பாக்கப் பொருளாதாரம் ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹோன் வாய், வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு, எடிசன் திரை விருது விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் செல்வக்குமார், கோலிவுட் திரைப்பட பிரபலங்களான சிம்ரன், குஷ்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)