கோலாலம்பூர், 19 மே (பெர்னாமா) -- 2025-இல் முதல் காலாண்டின் வளர்ச்சியும் வரி இடையூறும் மிதமாக பதிவாகி இருக்கும் வேளையில், ஓ.பி.ஆர் எனும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை, பேங்க் நெகாரா மலேசியா, இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் 25 அடிப்படை புள்ளிகளில் குறைக்கும் என்று முதலீட்டு வங்கிகள் எதிர்பார்க்கின்றன.
இவ்வாண்டு ஜூலை 9, செப்டம்பர் 4 மற்றும் நவம்பர் 6 ஆகிய மூன்று திட்டமிடப்பட்ட கொள்கைக் கூட்டங்கள் இன்னும் நடைபெறாமல் இருக்கும் நிலையில், அடிப்படை புள்ளிகளின் திருத்தத்திற்கு இன்னும் வாய்ப்புள்ளதாக Public Investment Bank நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், உலகளாவிய வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடர்பான தரவு மற்றும் முன்னேற்றங்களைப் பொறுத்தும் அதை செயல்படுத்தும் காலம் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பி.என்.எம் வரும் ஜூலை மாதத்தில் தனது கொள்கை விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளில் குறைக்கும் என்று Standard Chartered வங்கி எதிர்பார்க்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)