பொது

1எம்.டி.பி; சொத்துகளை வெளிநாட்டிலிருந்து திரும்ப பெறும் முயற்சிகளில் சிக்கல்

19/05/2025 04:51 PM

கோலாலம்பூர், 19 மே (பெர்னாமா) --   ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம், 1எம்.டி.பிக்கு தொடர்பான சொத்துக்களை வெளிநாட்டிலிருந்து திரும்ப பெறும் முயற்சிகள் சிக்கலாக உள்ளதாகவும், அதற்கு பல்வேறு தரப்பினரின் நிபுணத்துவம் தேவைப்படுவதாகவும் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்திருக்கிறார்.

வழக்கு தொடர்பான சில சொத்துக்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளை உட்படுத்தி திரும்ப அனுப்பும் செயல்முறைகள் இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதை அவர் ஒப்புக் கொண்டார்.

"1எம்.டி.பி பற்றி எப்படி உள்ளது. நாங்கள் இன்னும் திருப்பி அனுப்ப வேண்டியுள்ளது. இது எளிதான வேலை அல்ல. சில நிபுணர்களிடமிருந்து உதவி கிடைக்கவில்லை என்றால், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான செயல்முறை தாமதமாகும்", என்றார் அவர்.

1எம்.டி.பி வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் ரொக்கமாக மட்டுமில்லாமல் முதலீடுகள், அசையா சொத்துகள் மற்றும் பல்வேறு நிதி கருவிகளாகவும் உள்ளதாக அசாம் பாக்கி விவரித்தார்.

அவற்றில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் உள்ளதால் திரும்ப பெறுவதற்கு அமலாக்க நிறுவனங்கள் உட்பட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் வியூக ஒத்துழைப்பு தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)