ஜகார்த்தா, 16 மே (பெர்னாமா) -- இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 18 பப்புவா பிரிவினைவாதிகளை அந்நாட்டின் இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட அந்நடவடிக்கையில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் இராணுவ வீரர்கள் யாரும் பலியாகவில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிகள், வில், அம்புகள் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட வெடிமருந்துகளையும் தமது தரப்பு கைப்பற்றியதாக இராணுவ செய்தி தொடர்பாளர் கிறிஸ்டோமி சியான்டூரி தெரிவித்தார்.
பப்புவா பிரிவினைவாதக் குழுவைச் சேர்ந்த மூன்று உறுப்பினர் உயிரிழந்திருப்பதை அதன் செய்தி தொடர்பாளர் செப்பி சம்போம் உறுதிப்படுத்தினார்.
கிராம மக்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக, பப்புவா தேவாலாய குழுவின் கிளைத் தலைவரான ரொனால்ட் ரிச்சர்ட் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து நாட்டின் மனித உரிமைகள் அமைப்பு சுயேட்சையாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)