ஶ்ரீநகர், 15 மே (பெர்னாமா) - பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதங்களை அனைத்துலக அணு சக்தி நிறுவனம, IAEA தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதங்களை கொண்டு பாகிஸ்தான் அச்சுறுத்தி வருவதாகவும் அவர் சாடினார்.
அதோடு, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பது குறித்து உலக நாடுகளும் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"இத்தகைய பொறுப்பற்ற மற்றும் முரட்டுத்தனமான நாட்டின் கைகளில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பானதா? நான் உலகம் முழுவதிற்கும் இந்தக் கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள், அனைத்துலக அணு சக்தி நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வரப்படும் என்று நான் நம்புகிறேன். இதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்," என்றார் அவர்.
இன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ வீரர்களைச் சந்த்தித்தபோது ராஜ்நாத் சிங் அவ்வாறு தெரிவித்தார்.
அவர்களுக்கு வாழ்த்துகளை கூறிய அமைச்சர், பயங்கரவாதத்திற்கு எதிராக உயிர் நீத்த வீரர்களுக்கு தலை வணங்குவதாகவும் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)