சியால்கோட், 15 மே (பெர்னாமா) - புதன்கிழமை நடைபெற்ற இராணுவப் பேரணியில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அமைதிக்கான தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.
இருப்பினும், வரும் காலங்களில் ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கும் பாகிஸ்தான் தயாராக இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் அமைதியை விரும்பினாலும், அதனை ஒருபோதும் பலவீனமாக எண்ணி விட வேண்டாம் என்றும் Sharif நினைவுறுத்தினார்.
"திரு.மோடி (இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி), நீங்கள் மீண்டும் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். நீங்கள் அதை வாங்கிவிட்டீர்கள். நீங்கள் மீண்டும் திட்டமிட்டால் நாங்கள் தயாராக இருப்பதைக் காண்பீர்கள். நீங்கள் மீண்டும் தாக்க நினைத்தால், உங்களிடம் எஞ்சியிருப்பதும் அழிக்கப்படும். ஆனால், நாங்கள் அமைதியை விரும்புபவர்கள். இந்த வட்டாரத்தை ஒரு தொண்டு மனப்பான்மையுடன் அமைதியின் தொட்டிலாக மாற்ற வேண்டும்," என்றார் அவர்.
SUPER: ஷெபாஸ் ஷெரீஃப் / பாகிஸ்தான் பிரதமர்
கடந்த வாரம் இந்தியாவுடன் போரில் பங்கேற்ற இராணுவ வீரர்களுடனான் சந்திப்பில், ஷெரீஃப் அவ்வாறு கூறினார்.
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை முதல் பாகிஸ்தான் முழுவதும் இராணுவ ஆதரவு பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)