ஷா ஆலாம், 15 மே (பெர்னாமா) - 2025-ஆம் ஆண்டு கெஅடிலான் கட்சித் தேர்தலில் துணைத் தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளர் நூருல் இசா அன்வார், தம்மை எதிர்த்து போட்டியிடும் டத்தோ ஶ்ரீ முஹமட் ரஃபிசி ரம்லி உடனான விவாத அழைப்பை ஏற்க விரும்பவில்லை.
மாறாக, பெண்கள் மற்றும் இளைஞர்களை முன்னிறுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட திட்டங்களைத் தொடர்வதன் வழி பதற்றங்களைக் குறைக்க அவர் எண்ணம் கொண்டிருக்கிறார்.
"எனது பிரதிநிதிகளை நான் மென்மேலும் ஆதரித்து வருகிறேன். பெண்கள் மற்றும் இளைஞர்களை முன்னிறுத்தி எனக்கு திட்டங்கள் உள்ளன. அதனால் இம்முறையை நான் விரும்பவில்லை. அதில் கவனம் செலுத்தவும் விரும்பவில்லை. இது வெறும் அரசியல் நோக்கத்திற்காக அல்ல மாறாக அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்திருப்பது பற்றியதாகும்," என்றார் அவர்
இன்று சிலாங்கூர் மந்திரு புசாரும் சிலாங்கூர் கெடிலான் கட்சியின் எம்பிஎன் தலைவருமான டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரியுடன் நடைபெற்ற அடிமட்ட உறுப்பினர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் அதனைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)