பொது

பல்கலைக்கழகத்திற்கான இரண்டாம் கட்ட விண்ணப்பம் நீட்டிக்கப்பட்டுள்ளது

18/05/2025 06:56 PM

சரவாக், 18 மே (பெர்னாமா) -- பல்கலைக்கழகத்திற்கான இரண்டாம் கட்ட விண்ணப்பத்தை, நாளை திங்கட்கிழமை காலை மணி 8 வரை உயர்கல்வி அமைச்சு நீட்டித்துள்ளது.

இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தங்களது எதிர்காலத்தை தேர்ந்தெடுக்கும் முடிவுகளில் மாணவர்கள் அவசரப்படக்கூடாது என்றும் உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ப்ரி அப்துல் காடீர் தெரிவித்துள்ளார்.

அனைத்து விதமான பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள் தங்களது மேற்கல்வியைத் தொடர நியாயமான வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்வதற்கான தீர்வைக் கண்டறிய உயர்கல்வி அமைச்சு எப்போதும் முயற்சிக்கும் என்று அவர் கூறினார்.

நிதிப் பிரச்சனையை ஒரு தடையாக கருதாமல் முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு தீர்வுக்காண தங்களது தரப்பு உதவி செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற 'Jom Masuk U' கண்காட்சி நிகழ்ச்சியில் தமது காணொளியின் பதிவின் வழி முன்னாள் தென்னாப்பிரிக்கத் தலைவர் மறைந்த நெல்சன் மண்டேலாவின் கருத்துகளை மேற்கோள் காட்டி இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

விண்ணப்பங்கள் குறித்த மேல் விவரங்களைப் பெறுவதற்கு https://upu.mohe.gov.my/ என்ற அகப்பக்கத்தை நாடலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)