சிப்பாங், 18 மே (பெர்னாமா) -- அனைத்துலக ராட்சத பாண்டா பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ், ஒப்பந்தத்தின் விதிமுறைகளை நிறைவேற்ற, 2014ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி முதல், மலேசியாவில் இருக்கும் சீனாவின் ராட்சத பாண்டா ஜோடியான ஃபூ வா மற்றும் ஃபெங் யீ, அதிகாரப்பூர்வமாக அந்நாட்டிற்கே திரும்ப அனுப்பப்பட்டுள்ளன.
மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நெருங்கிய நட்பின் சின்னமாக இக்கூட்டுத் திட்டம் இருப்பதாக இயற்கை வளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சு, என்.ஆர்.இ.எஸ் அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.
ராட்சத பாண்டா இனங்களைப் பாதுகாப்பதில் சீனாவுடன் இணைந்து பணியாற்ற மலேசியா தொடர்ந்து உறுதிகொண்டுள்ளதோடு, இது இரு நாடுகளுக்கும் இடையிலான அரச தந்திர மற்றும் பொருளாதார அம்சங்களில் உறவுகளை மேலும் வலுப்படுத்த முடியும்.
இந்த ஜோடியின் மூன்று ராட்சத பாண்டா குட்டிகளான நுவான் நுவான், 2017ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதியும், யீ யீ மற்றும் ஷெங் யீ 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதியும் சீனாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)