ஜோகூர் பாரு, 14 மே (பெர்னாமா) - கட்டுப்படுத்தப்பட்ட பொருளான உதவித் தொகைப் பெற்ற சமையல் எண்ணெய்யின் போதுமான கையிருப்பை உறுதி செய்யும் வகையில் அதன் விநியோகமும் மண்டல வாரியாக நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தப்படும்.
பொட்டலமிடும் நிறுவனங்கள், பேரங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உட்பட POS எனப்படும் விற்பனை மையங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மண்டலங்கள் வழியாக பொட்டலமிடும் நிறுவனங்கள் சமையல் எண்ணெய்களை விநியோகிக்க வேண்டும் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் ஃபுசியா சாலே தெரிவித்தார்.
உதவித் தொகைக் கொண்ட சமையல் எண்ணெய்களை பொட்டலமிடும் நிறுவனம் ஒன்றை பார்வையிட்டப் பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் ஃபுசியா சாலே அவ்வாறு தெரிவித்தார்.
நாடு முழுவதும் 300 பொட்டலமிடும் நிறுவனங்களை உட்படுத்தி ஒரு மாதத்திற்கு 60 ஆயிரம் டன், உதவித் தொகைக் கொண்ட சமையல் எண்ணெய் ஒதுக்கீட்டை அரசாங்கம் நிலைநிறுத்தி வருவதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)