புந்தோங், 14 மே (பெர்னாமா) - நேற்று காலை தெலுக் இந்தானில் நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்த ஒரே இந்தியரும் சேமப் படை உறுப்பினருமாகிய சார்ஜன் பெருமாள் சுகுணநாதனின் நல்லுடல், இன்று மாலை மணி 3.30-க்கு மேல், பேராக் புந்தோங் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அன்னாரின் இறுதிச் சடங்கில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், போலீஸ் அதிகாரிகள், உறுப்பினர்கள் என திரளானோர் கலந்து அஞ்சலி செலுத்தினர்.
மயானத்தில் தகனம் செய்வதற்கு முன்னதாக பெருமாளின் உடலுக்கு தேசியக் கொடி போர்த்தப்பட்டு அரச மலேசிய போலீஸ் படை பிடிஆர்எம்-இன் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இதனிடையே, இச்சம்பவத்தில் மரணமடைந்த இதர எட்டு சேமடையினரான 46 வயதான Sjn Mohd Roslan Abd Rahim, 41 வயதான Kpl Mohd Pozli Jaudin, 34 வயதான Kpl Nurit Ak Pandak, 38 வயதான Kpl Amiruddin Zabri, 38 வயதான Kpl Mohamad Hilmi Mohd Azlan, 35 வயதான Kpl Muhamad Akmal Muhamad, 33 வயதான L/Kpl Damarrulan Abdul Latif மற்றும் 28 வயதான Konstabel Akmal Wafi Annuar ஆகியோரின் நல்லுடல்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டன.
அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னதாக அவர்களின் உடல்களுக்கும், பிடிஆர்எம்-இன் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)