பொது

விபத்து தொடர்பான போக்குவரத்து அமைச்சின் அறிக்கை ஒரு மாதத்திற்குள் நிறைவடைய வேண்டும்

14/05/2025 06:00 PM

புத்ராஜெயா, 14 மே (பெர்னாமா) --   தெலுக் இந்தானில் சேமப் படையின் உறுப்பினர்களை உட்படுத்தி நிகழ்ந்த சாலை விபத்து தொடர்பான போக்குவரத்து அமைச்சின் அறிக்கை ஒரு மாதத்திற்குள் நிறைவடைய வேண்டும்.

விபத்து குறித்த முடிவுகளை எடுப்பதற்கு முன்னதாக, அந்த அறிக்கை மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தொடர்பு அமைச்சரும், மடானி அரசாங்கத்தின் பேச்சாளருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

"எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்பு, போக்குவரத்து அமைச்சின் அறிக்கை ஒரு மாதத்திற்குள் நிறைவடைந்து அமைச்சரவையில் மீண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது'', என்றார் அவர்.

போக்குவரத்து அமைச்சின் அதிகார வரம்பிற்கு உட்பட குற்றமற்ற விவகாரங்களை ஆராய, சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியதாக, ஃபஹ்மி தெரிவித்தார்.

எனினும், விபத்து தொடர்பான குற்றவியல் கூறுகள் குறித்து ஆராய அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் தொடர்ந்து விசாரணையை மேற்கொள்ளும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)