அரசியல்

மாறிவரும் காலங்களை எதிர்கொள்ளும்போது நடைமுறைக்கு ஏற்றதாக அம்னோ இருக்க வேண்டும் 

11/05/2025 06:02 PM

கோலாலம்பூர், 11 மே (பெர்னாமா) - அம்னோ இனி நிலையானதாகவோ அல்லது தேக்கநிலையிலோ இருக்க முடியாது.

மாறாக, அரசியல் நிலப்பரப்பின் இயக்கவியல் மற்றும் அதிகரித்து வரும் சவாலான மாறிவரும் காலங்களை எதிர்கொள்ளும்போது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

அதோடு, அம்னோ காலாவதியான அணுகுமுறைகளை நம்பியிருக்காமல் அதன் உத்திகள், அணுகுமுறைகள் மற்றும் பணி செயல்முறைகளை, புதிய அரசியல் யதார்த்தத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கத் துணிய வேண்டும் என்று அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

தற்போதைய வாக்காளர்கள் அதாவது Gen Z மற்றும் Alpha தலைமுறையினர் சமூக ஊடகக் காலக்கட்டத்தில் வளர்க்கப்பட்டு, வடிவமைக்கப்பட்ட வெவ்வேறு கண்ணோட்டங்களுடன் வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று, கோலாலம்பூரில், உலக வாணிய மையத்தில் நடைபெற்ற 79ஆவது அம்னோ தினத்தில் உரையாற்றும்போது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)