பொது

சரவாக்கில் வேலை செய்வதினால் படிப்பைத் தொடர இயலாதவர்களுக்கு இலவச உயர்கல்வி

18/05/2025 06:10 PM

கூச்சிங், 18 மே (பெர்னாமா) -- வேலை செய்வதினால் தங்களது படிப்பைத் தொடர வாய்ப்பு கிடைக்காத சரவாக் மக்கள், மாநில அரசாங்கம் வழங்கும் இலவச உயர்கல்வியைத் தொடர தகுதிப்பெறுவார்கள் என்று சரவாக் மாநில முதலமைச்சர் டான் ஶ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஒபெங் தெரிவித்துள்ளார்.

சரவாக் மாநிலத்தவர்கள் தங்களது திறன்களை மேம்படுத்தவும் அண்மைய தொழில்நுட்பம் மற்றும் அறிவைப் பெறவும் இளங்கலை பயிலும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி அவர் வலியுறுத்தினார்.

இன்று சரவாக் மாநில அளவில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அபாங் ஜொஹாரி அவ்வாறு தெரிவித்தார்.

கல்வி மற்றும் திறன் பயிற்சி வழி மூலதனத்தை வளர்க்க இந்த நடவடிக்கை வகை செய்வதாக அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)