கோலாலம்பூர், 08 மே (பெர்னாமா) - இம்முறை நடைபெறும் கெஅடிலான் கட்சியின் தலைமைத்துவத்திற்கான தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இசா அன்வாருக்கு போட்டியிடுவதற்கு 150க்கும் மேற்பட்ட கட்சித் தொகுதிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
கட்சியை உட்படுத்தி நாட்டின் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கைக் காட்டிலும் இது அதிகமாகும் என்று கட்சியின் முதலாவது தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஶ்ரீ ரமணன் இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
"இந்த ஆதரவானது வெறும் ஐம்பதிலிருந்து முப்பது வரைக்குமானது அல்ல. மாறாக, தொகுதியில் உள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையினர் அவர் போட்டியிட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். என் கருத்துப்படி, அது தவறல்ல, ஏனெனில் அது கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் விண்ணப்பமாகக் கருதப்படுகிறது,'' என்றார் அவர்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான உச்சநிலை மாநாடு AFC மற்றும் மலேசியா அனைத்துலக துரித உணவு கண்காட்சி FIM 2025-இல் கலந்து கொண்ட தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ரமணன் செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)