காஷ்மீர், 29 ஏப்ரல் (பெர்னாமா) -- காஷ்மீரில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக, பாகிஸ்தானும் இந்திய இராணுவமும் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இதனால், பதற்றமான சூழ்நிலை அதிகரிக்கும் வேளையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவும் மோசமடைந்து வருவதை இது காட்டுகின்றது.
முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் காஷ்மீரில், துப்பாக்கி ஏந்திய குழு, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, எல்லைக் கடந்த வன்முறைகளை பாகிஸ்தான் ஆதரிப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது.
அக்குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கும் பாகிஸ்தான், ஆதரமின்றி தங்களை இந்தத் தாக்குதலுடன் இணைக்க முயற்சிப்பதாகவும், இந்தியாவின் எந்தவொரு நடவடிக்கைக்கும் பதிலடி கொடுக்கவும் உறுதி கொண்டுள்ளது.
இதனிடையே, இரு நாடுகளை பிரிக்கும் கட்டுப்பாட்டுக் கோடான LOC-இல் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை நடத்தியதாக இந்திய இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
அண்மைய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை பாகிஸ்தான் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)