பொது

புத்ரா ஹைட்ஸ்; 85 உயர்க்கல்வி கழக மாணவர்கள் பாதிப்பு

12/04/2025 05:24 PM

புத்ரா ஹைட்ஸ், 12 ஏப்ரல் (பெர்னாமா) --  புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உயர்க்கல்வி கழக மாணவர்களின் எண்ணிக்கை 85 ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் தங்களின் கல்வியைத் தொடர அந்தந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் வளாகங்களுக்குத் திரும்பிவிட்டதாக உயர்கல்வி தலைமை இயக்குநர் டத்தோ பேராசிரியர் டாக்டர் அஸ்லின்டா அஸ்மான் கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட 85 மாணவர்களில் 40 விழுக்காட்டினர் இயங்கலை வழியாக கல்வியைத் தொடர்வதாகவும், பாதிக்கப்பட்ட அவர்களுக்கு மடிக்கணினி வசதியை ஏற்படுத்தி கொடுக்க தமது அமைச்சு முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதோடு, இதில் மாணவர்களில் சிலர் அதிர்ச்சி அடைந்துள்ளதால், அவர்களுக்கு உளவியல் ரீதியான ஆதரவவையும் தாங்கள் வழங்குவதாக டாக்டர்  அஸ்மான் குறிப்பிட்டார்.

வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்புரவு பணிகளுக்குப் பின்னர் அவர் அதனைக் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)